வணக்கம்

வணக்கம். என் வலைப்பூவிற்கு வருகையளித்தமைக்கு நன்றி. எனது பதிவுகளை படியுங்கள், இரசியுங்கள், ஏதேனும் குற்றங்குறையிருந்தால் இடுகையிடுங்கள். உங்கள் பொழுது சிறக்கட்டும்... :)

Wednesday, June 23, 2010

என் உயிர் சினேகிதி நீயோ....

பூவிதழ்மேல் பனித்துளி பனித்துளி

போன்றோ – உன் காதல் எனக்கு
பூவினில் ததும்பும் சுவைத்தேனும் நீயோ

இதமான நீலச்சுடரோ நிலவோ
யாழிசையும் நீயோ
உன் சிரிப்போ இசையோ சலங்கையொழியோ

அன்பே அன்பே நீயோ ஒரு பார்வை பார்த்தாயோ
அன்றே அன்றே நானோ சிறகின்றி பறந்தேனோ
ஒளியோ வளியோ நீயோ என் உயிர் சினேகிதி நீயோ

கால் நிமிடம் சிரித்தாயோ
யுகம் முழுதும் கண்டேனோ
சிறு சிறு சொற்முத்திரையோ
ஆழ் மனதில் பதித்தேனோ
உன்னிடத்து மௌனம் ஒன்றோ
ஒரு கவிதைப் பூச்சரமோ

பூவிதழ்மேல் பனித்துளி பனித்துளி

போன்றோ – உன் காதல் எனக்கு
பூவினில் ததும்பும் சுவைத்தேனும் நீயோ

ம.தீபா

Friday, May 7, 2010

அகர முதல எழுத்தெல்லாம்...

இனத்துக்கெல்லாம் மொழிதான் அடையாளம்.

மொழிக்கெல்லாம் எழுத்துதான் அடித்தளம்.

எழுத்துக்கெல்லாம் அகரம்தான் முதன்மை.

மொழிகளில் பல்லாயிரம் உண்டு.

நான் கேள்விப்பட்ட சில மொழிகளுக்கு எந்த எழுத்து அகரம் என்று பார்க்கலாமே, வாருங்கள்!

1.  ஆப்பிரிக்கான் மொழி (ஆப்பிரிக்காவில் பேசப்படும் மொழி) - A,

2.  டன்ஸ்க் மொழி (டென்மார்கில் பேசப்படும் மொழி) - A, ஏ

3.  டச் மொழி (நெதெர்லாந்தில் பேசப்படும் மொழி) - A, ஆ

4.  ஃப்ரென்சு மொழி (ஃப்ரான்சில் பேசப்படும் மொழி) - A, அ

5.  இத்தாலிய மொழி (இத்தாலியில் பேசப்படும் மொழி) - A, அ

6.  நோர்வேஜிய மொழி (நோர்வேயில் பேசப்படும் மொழி) - A, அ

7.  போர்துகீசிய மொழி (போர்துகலில் பேசப்படும் மொழி) - A, அ

8.  உருமேனிய மொழி (உருமேனியாவில் பேசப்படும் மொழி) - A, அ

9. எசுப்பானிய மொழி (ஸ்பேயினில் பேசப்படும் மொழி) - A, அ

10. சுவீடிய மொழி (சுவீடனில் பேசப்படும் மொழி) - A, அ

11. ஜெர்மன் மொழி (ஜெர்மனில் பேசப்படும் மொழி) - A. அ

12. இந்தோனேசிய மொழி (இந்தோனேசிய மொழி) - A, அ

13. மலாய் மொழி (மலேசியாவில் பேசப்படும் மொழி) - A, அ

14. சுவாகிலி மொழி (தான்சானியாவிலும் கெனியாவிலும் பேசப்படும்    மொழி) - A, அ

15. அல்பானிய மொழி (அல்பானியாவில் பேசப்படும் மொழி) - A, அ

16. அம்ஹாரிய மொழி (எத்தியோப்பியாவில் பேசப்படும் மொழி) - , ஹ

17. ஆர்மேனிய மொழி (ஆர்மேனியாவில் பேசப்படும் மொழி) - Ա , ஐப்

18. அசர்பைஜான் மொழி (ஈரானில் பேசப்படும் மொழி) - ا  / A, ஆ

19. வங்காள மொழி (வங்காள தேசத்தில் பேசப்படும் மொழி) - , தமிழில் எழுத்து இல்லை, ஆங்கிலத்தில் 'SAW' என்ற வார்த்தையில் வரும் 'A' எழுத்தின் ஒலி.

20. பல்கேரிய மொழி (பல்கேரியாவில் பேசப்படும் மொழி) - A, அ

21. செக் மொழி (செக் குடியரசில் பேசப்படும் மொழி) - A, அ

22. பின்னிய மொழி (பின்லாந்தில் பேசப்படும் மொழி) - A, ஆ

23. கிரேக்க மொழி (கிரேக்க நாட்டில் பேசப்படும் மொழி) - A, அ

24. எபிரேய மொழி (இசுரேல் நாட்டில் பேசப்படும் மொழி) - א, ஆ

25. ஹிந்தி மொழி (இந்தியாவில் பேசப்படும் மொழி) - , அ

26. அங்கேரிய மொழி (அங்கேரியாவில் பேசப்படும் மொழி) - A, ஆ

27. ஐஸ்லாந்திக் மொழி (ஐஸ்லாந்தில் பேசப்படும் மொழி) - A, அ

28. இலொகானோ மொழி (பிலிப்பைன்ஸில் பேசப்படும் மொழி) - a, அ

29. கன்னட மொழி (இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தில் பேசப்படும் மொழி) - , அ

30. லாத்வியன் மொழி (லாத்வியாவில் பேசப்படும் மொழி) - A, அ

31. லீத்துவானிய மொழி (லீத்துவானியாவில் பேசப்படும் மொழி) - A, அ

32. மாக்கடோனிய மொழி (மாக்கடோனியக் குடியரசில் பேசப்படும் மொழி) - A, ஆ

33. மங்கோலிய மொழி (மங்கோலியாவில் பேசப்படும் மொழி) - A, அ

34. பாரசீக மொழி (ஈரானில் பேசப்படும் மொழி) - ا , ஆ

35. போலிய மொழி (போலந்தில் பேசப்படும் மொழி) - A, அ

36. செர்பிய மொழி (செர்பியாவில் பேசப்படும் மொழி) - A, அ

37. சுலோவாக் மொழி (சுலோவாக்கியாவில் பேசப்படும் மொழி) - A, அ

38. சுலோவீனிய மொழி (சுலோவீனியாவில் பேசப்படும் மொழி) - A, அ

39. டகாலொக் மொழி (பிலிப்பைன்ஸில் பேசப்படும் மொழி) - A, அ

40. தாஜிக் மொழி (தாஜிகிஸ்தானில் பேசப்படும் மொழி) - А, அ

41. தமிழ்மொழி (இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் பேசப்படும் மொழி) - அ

42. தெலுங்கு மொழி (இந்தியாவிலுள்ள ஆந்திரப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி) - , அ

43. தாய் மொழி (தாய்லாந்தில் பேசப்படும் மொழி) - , கோ காய்

44. துருக்கிய மொழி (துருக்கியில் பேசப்படும் மொழி) - A, ஆ

45. உக்ரைனிய மொழி (உக்ரைனில் பேசப்படும் மொழி) - A, அ

46. உருது (பாகிஸ்தானில் பேசப்படும் மொழி) - ا, அ

47. உஸ்பெக் மொழி (உஸ்பெகிஸ்தானில் பேசப்படும் மொழி) - A, தமிழில் இவ்வெழுத்துக்கேற்ற ஒலி இல்லை. 'Hat' என்ற ஆங்கிலச் சொல்லில் 'A' என்ற எழுத்தின் ஓசை.

48. வியட்னாமிய மொழி (வியட்னாமில் பேசப்படும் மொழி) - A, அ

49. சுலு மொழி (தென்னாப்பிரிக்காவில் பேசப்படும் மொழி) - A, அ

50. அரபு மொழி (எகிப்து, சவுதி அரேபியா, ஈராக் போன்ற நாடுகளில் பேசப்படும் மொழி) - ا, அ

51. கந்தோனீஸ் மொழி (தென்சீனாவில் பேசப்படும் மொழி) - எழுத்துக்கள் வரிசைப்படி இல்லை

52. சீன மொழி (ஒரு மொழிக் குடும்பம்; சீனாவில் பேசப்படும் மொழிகள் இக்குடும்பத்தில் அடங்கும்) - எழுத்துக்கள் வரிசைப்படி இல்லை

53. ஜப்பானிய மொழி (ஜப்பானில் பேசப்படும் மொழி) - எழுத்துக்கள் வரிசைப்படி இல்லை

54. கொரிய மொழி (தென் கொரியாவிலும் வட கொரியாவிலும் பேசப்படும் மொழி) - ㅏ, அ

55. மண்டரின் மொழி (சீனாவில் பேசப்படும் மொழி) - எழுத்துக்கள் வரிசைப்படி இல்லை

Tuesday, April 20, 2010

ஒரு தமிழனது பயணம்...

அன்று,
ஆசைகள் கொன்று,
இனிதே ஒரு வெறி எனக்கென்று,
ஈர மனதில் உதித்ததன்று...

உறக்கம் அனைத்தும் தொலைத்தேன்
ஊன் மறந்தேன்...
என்னை அற்பணித்தேன்
ஏங்கும் விழிகளின் விடியலுக்கு....
ஐயெனல் நீங்கப் போரிட்டேன்...

ஒசிந்து போனது போராட்டம் - ஏன்?
ஓர் ஏதிலன் செய்த சதித்திட்டம்
ஔவியம் படைத்த ஓர் ஏதிலன்...

விழுவது மீண்டும் எழவே...
தொடரும்...
ஒரு தமிழனது பயணம்....
நீதியை நோக்கி...

Wednesday, April 7, 2010

உனக்காக காத்திருக்கையில்...

எனக்கு அனுப்பப்பட்ட கவிதைகளுள் ஒன்று...

எப்போதாவது

வந்து அமரும் குருவிக்கு

காத்திருக்கும் ஒற்றை பனை மரமாகிறேன்

உனக்காக காத்திருக்கையில்

Sunday, April 4, 2010

கண்ணீருடன், சீதை


மலர்களே,


ஒரு கதை சொல்கிறேன்

கேளுங்கள்.



மலரும் மணமும் பிரிந்து கண்ட்துண்டோ?

இதோ

நன்கு பாருங்கள்...

மணமின்றி வாடி நிற்கும் மலரே நான்...

தேன்ததும்பிய விழிப்பூக்களில்

பெருக்கெடுத்தோடுகிறது கண்ணீர்த்துளிகள்...

குயிலினம் வதுவை செய்ய

நான் கண்ணுற்றேன்...



மனம் பறந்ததம்மா

இராமரைத் தேடி அலைந்து அலைந்து

நித்தம் திரியுதம்மா...



வில்வளைத்து நாணேற்ற

அயோத்யாப் புத்திரன் கரம்பிடித்தேன்...

இன்றோ அயோசனம் தெரியுது கைகளிலே...



மனதில் குடிகொண்ட மன்னவா...

மாதிமையால் தினம் வாடினேன்...

புள்ளகம் தொலைத்தேன் நான் இன்று

வெறும் புள்ளாய் வாடினேன் உனக்கென்று...



வருடிச் செல்லும் இளங்காற்றே...

போய்ச்சொல் என் மணவாளனிடம்...

வழிமேல் விழிவைத்துள்ளேன்

காதலன் வருகைக்காக...

இலங்கை சிறையினின்று

மீட்டுக்கொள்ளச் சொல் என்னை...

என் மன்னவனே...

காத்திருப்பேன் அதுவரை...



கண்ணீருடன்,

சீதை

(அசோக வனத்திலிருந்து)

Wednesday, March 3, 2010

லவ் யூ, அப்பா...

ஓர் ஆடவர் தன் காரைக் கழுவிக் கொண்டிருக்கையில், அவனது நாங்கு வயது மகன் ஒரு கல்லையெடுத்து காரோரத்தில் கீறினான்.  கோபத்தில் அந்த ஆடவர் அச்சிறுவனின் கையைப் பிடித்து பல தடவை அடித்தான்; தான் அடிக்கப் பயன்படுத்தியது ஒரு ஸ்பானர் என்றறியாமலேயே...

ஆஸ்பத்திரியில், பலத்த ஃப்ரெக்துரினால் அக்குழந்தை தன் எல்லா விரல்களையும் இழந்து விட்டது. அக்குழந்தை கண்களில் வலியுடன் தன் தந்தையிடம் வினவியது... 'அப்பா, என் விரல்கள் எப்போது வளரும்?'
மனம் நொந்த ஆடவர் வார்த்தையின்றி நின்றான்; தன் காரை நோக்கிச் சென்று காரைப் பல தடவை உதைத்தான். மன விரக்தியோடு காரருகே அமர்ந்தபோது, அந்தக் கீறல்கள் தன் கண்ணில் சிக்கின...

'லவ் யூ, அப்பா...'


*நான் படித்த கதை...

Thursday, February 11, 2010

விளையாட்டுப் பிள்ளை...

விளையாட்டுப் பிள்ளை...
இல்லை அவளுக்குத் தொல்லை...
சுற்றித் திரியும் முல்லை...
சொன்னதைச் சொல்வாள் கிளிப்பிள்ளை...

இல்லையே ஓர் எல்லை...
அவளது அன்புத் தொல்லை...
தேன்ததும்பும் சொல்லை...
மலர வைக்கும் கிள்ளை...

ம. தீபா


p.s.  சிறு பிள்ளைக்காலம் என்றென்றும் தேன் பருவமன்றோ.........

Monday, February 8, 2010

வணக்கம்

வணக்கம்.  தமிழில் என் படைப்புகளை வெளியிட இத்தளத்தை நான் உருவாக்கியுள்ளேன்.  இது என் முதல் புலோக் ஆகையால் ஏதேனும் குற்றம் குறை இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.